செவ்வாய், அக்டோபர் 18, 2011

.


தன்மானமில்லாத் தலைவர்

ஆந்திராவின் குண்டூர் பகுதிக்குச் சென்றிருந்த சங்கராச்சாரியார் தெலுங்கானா தனியாக பிரிக்கப்பட்டால் நக்ஸலைட்கள் பலமடைவார்கள் நக்ஸலைட்கள் பலமடைந்தால் நாட்டின் இறையான்மைக்கு ஆபத்து அனைவரும் தெலுங்கு மொழியையே தாய்மொழியாக கொண்டிருப்பதால் இணைந்திருப்பதே சிறந்தது என்று ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.

பிரிவினை கோரும் தெலுங்கானாப் பகுதிகளில் தான் நக்ஸலைட்கள் நிறைந்திருப்பது போலும் தெலுங்கானா பிரிக்கப்பட்டு விட்டால் புதிய தெலுங்கானாவின் முக்கிய கேந்திரங்கள் நக்ஸலைட்கள் வசம் வந்துவிடும் என்பது போலான மாயைகளை இவர்களைப் போன்றவர்களால் பரப்பப்படுகின்றது என்பதில் எள்ளலவும் உண்மை இல்லை என்பது தனி விஷயம்.

அவருடைய கருத்துப்படி நக்ஸலைட்கள் பலம் பெற்று விடுவார்கள் என்றால் அந்த கருத்திலாவது அவர் உறுதியாக இருக்க வேண்டுமா ? இல்லையா ? 

அவரது பேட்டி ஊடகங்களில் வெளியான சில மணி நேரங்களிலெல்லாம் அவரது உருவபொம்மையை எரித்து அவரின் கருத்தின் மீது கண்டன கோஷங்களை எழுப்பி தனி தெலுங்கானா கோரிக்கையாளர்கள் நாடு முழுவதும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர்.

இதை அறிந்த சங்கராச்சாரியார் தனது உருவபொம்மை எரிப்பையும்> தன் மீதான தண்டன கோஷங்களையும் உடனடியாக தடுத்து நிருத்துவதற்காக ஊடகங்கள் செய்தியை திரித்து வெளியிட்டு விட்டது> தனி தெலுங்கானா உருவாக வேண்டும் என்பது பெரும்பான்மை மக்களின் கோரிக்கையாக இருந்தால் பிரித்துக் கொடுத்து விடுவதே சிறந்தது என்று அரசியல்வாதிகள் வெட்கி தலைகுணியும் அளவுக்கு அந்தர் பல்டி அடித்து மறு அறிக்கை வெளியிட்டார்.

நாட்டு நலனா ? சுயநலனா
நக்ஸலைட்கள் வளர்ந்தால் நாட்டுக்கு நாசம் எனில் !
தான் நாட்டு மக்களின் ஒரு போற்றுதலுக்குரிய ஆன்மீகத் தலைவர் எனும் நிலையில் நாட்டின் நலன் மீது அக்கறை கொண்டு தனி தெலுங்கானா உருவாவது சரியல்ல என்றுக் கூறிய கருத்தில் உறுதியாக நிற்காதது ஏன் ?

உறுதியாக நிற்காததற்கு இது தான் காரணம் !
தொன்று தொட்டு காலமாக இதுவரை இந்தியாவின் தென்பகுதிகளில் வாழும் ஹிந்துக்களில் அதிகமானோர் சங்கராச்சாரியார்களை நடமாடும் தெய்வம் என்று மதித்து வந்தனர் கடந்த காலத்தில் இதயம் இதழில் பேசும் தெய்வம் எனும் தலைப்பில் சங்கராச்சாரியார்களின் புனிதத்துவம் பற்றி தொடர் எழுதி வந்தனர். புனிதத்துவம் கருதி அவர்களின் மலம் கூட பூமியில் நேரடியாக விழக்கூடாது என்று  வாழை இலையில் மலம் கழிக்கும் அளவுக்கு  உயர்த்தப்பட்டனர்.

சங்கராச்சாரியாரை நேரடியாகவோ> மறைமுகமாவோ விமர்சிப்பவர்கள் மீது கடும் நடிவடிக்கை எடு;க்கப்படும் எனும் அளவுக்கு முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் முதல்வராக இருந்த பொழுது அறிக்கையே விட்டிருந்தார்; அதன் பிறகு அவரே கைது செய்து உள்ளேயும் தள்ளினார் என்பது தனி விஷயம்.

புனித(?)மிக்க சங்கர மடத்து ஆச்;சாரியார்களில் உருவ பொம்மை எரித்து தெரு வீதிகளில் கண்டன கோஷங்கள் எழுப்பியது இதுவே முதல் முறை இதை கேவலமான செயலாகக் கருதியதால் இந்த கேவலத்தை தடுத்து நிருத்துவதற்காக வேறு என்ன மாதிரியான அறிக்கைகள் விட்டாலும் உடனடியாக நிருத்த முடியாது என்பதை தெலுங்கானா கோரிக்கையாளர்களின் உறுதியான மனநிலையை அறிந்தவர் நக்ஸலைட்கள் வளர்ந்து நாடு நாசமாகப் போனாலும் பரவாயில்லை நமது புனித்ததுவம்(?) காக்கப்பட வேண்டும் எனும் சுயநலத்தால் கொடுத்தப் பேட்டியை ஊடகங்கள் செய்தியை திரித்து வெளியிட்டு விட்டது. என்று பல்டி அடித்து உருவ பொம்மை எரிப்பையும்> கண்டன கோஷங்களையும் முடிவுக்கு கொண்டு வந்தார். 

சுயநலனிற்காக நாட்டு நலனை விட்டுக் கொடுப்பது என்பது இவர்களது இந்த நிகழ்வுகள் மட்டும் உதாரணமல்ல நாடு அடிமைப் பட்டுக் கிடந்த காலத்தில் இவர்களின் முன்னோர்கள் இதே வேலையைத் தான் செய்தார்கள் என்பதை சுதந்திர வரலாற்றைப் படித்தவர்கள் நன்கு அறிவார்கள்.



நாம் கேட்பது நாட்டின் நலன் கருதி என்று அறிவித்த அந்தக் கருத்தை சுயநலனிற்காக அவ்வாறு அறிவிக்க வில்லை என்று நாகூசாமல் பொய்க் கூறி வாபஸ் வாங்கிய ஆன்மீகத் தலைவராகிய இவரை விட ஐபிஎல் அணியில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாட வேண்டும் என்ற சொந்தக் கருத்தை என்ன இழப்பு ஏற்பட்டாலும் வாபஸ் வாங்க மாட்டேன் தாக்கரேயின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன் என்று உண்மையை மறைக்காமல் சூளுரைத்த சினிமா நடிகன் சாருக்கான் எவ்வளவோ மேல்.  

எத்தனையோ தன்மானம் காத்த வரலாற்று சிறப்பு மிக்க தலைவர்களின் சரித்திரம் நம்மிடம் இருந்தாலும் இவருக்கு அவர்களை உதாரணம் காட்ட உள்ளம் மறுப்பதால்; மிகவும் சமீபத்திய சம்பவமாகிய சினிமா நடிகன் சாருக்கானுடைய தன்மானத்தை உதாரணமாக்குகிறோம்.



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்