செவ்வாய், அக்டோபர் 18, 2011

.



போலி சாமியார்கள் வருடம்...


ஒவ்வொரு வருடமும் நம்மைக் கடந்து சென்ற வருடத்தின் முக்கிய நிகழ்வுகளை புதுவருடத்தில் அசைப் போடுவது வழக்கம் இறுதியில் கடந்து சென்ற முக்கிய நிகழ்வுகளில் மனதை பாதிக்கச்செய்த, அல்லது மகிழ்ச்சி அளிக்கச்செய்த சம்பவத்தின் பெயரையே கடந்த வருடத்திற்கு சூட்டி அழைப்பதும் வழக்கம்.

அவ்வாறு கடந்த 2010ஐப் பொறுத்தவரை லஞ்ச வருடம், அல்லது போலி சாமியார்கள் வருடம் எனலாம். இதில் போலி சாமியார்கள் வருடம் என்றழைப்தே சாலச் சிறந்தது. காரணம் நீண்ட காலமாக அப்பாவி மக்களை அடிமைப் படுத்தி சுரண்டி உண்டுக் கொழுத்து வந்த ஆரிய இசத்திற்கு முடிவுரை எழுதிய வருடம் என்றால் மிகையாகது.   

வாழும் தெய்வங்கள் என்றுக்கூறி காலைக்கழுவி குடிக்கப்பட்டவர்கள், பாலாபிஷேகம் செய்யப்பட்டவர்கள் ஒருவர் பின் ஒருவராக வரிசையாக கொலை,கஞ்சா,கள்ளக்காதல் என்று தாமாகவே மாட்டிக்கொண்டனர். அவ்வாறு மாட்டிக்கொண்டவர்களில் முதலிடம் வகித்தது தமிழ்நாட்டு நித்யானந்தாவாகும்.

இந்தியாவையே அதிரச் செய்த நித்யானந்தா ரஞ்சிதா இணைந்த ஆபாச சிடி வெளியானதை அடுத்து தலைமறைவான ரஞ்சிதா இப்பொழுது பிதாதியில் நடந்த நித்யானந்தாவின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் வெளிப்படையாகவே கலந்துகொண்டு அந்த சிடியில் இருப்பது நாங்கள் அல்ல என்றும், லெனின் கருப்பன் என்னை பலமுறை கற்பழிக்க முயற்சித்தார் என்றும் கூறி உள்ளார்.

இன்னும் ரஞ்சிதாவுடன் வடஇந்திய, தென்னிந்திய நடிகைகள் பட்டாளம் சூழ்ந்துகொண்டு நித்யானந்தாவுக்கு வாழ்த்துக் கூறி மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி உள்ளனர்.  


ஸ்காட்லாந்தில் வடநாட்டு சாமியார் பாபா ராம்தேவ் ஒரு தீவை விலைக்கு வாங்கி ஆஸ்ரமம் அமைத்து பாரம்பரியம், கலாச்சாரம் என்ற கழுத்தறுப்பு டார்ச்சர் இல்லாமல் நிம்மதியாக நடத்தி வருவதைப் போல் இவரும் அவருடைய ஆபாச சிடி வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் ''லாஸ் ஏஞ்சல்ஸ்'' நகரில் ஆஸ்ரமம் அமைக்க 100 ஏக்கரில் ஒருத் தீவு விலைப் பேசப்பட்ட தகவலை அவரை விசாரித்து வந்த கர்நாடகா சிஐடி போலீஸார் தெவித்திருந்தது நினைவிருக்கலாம்.

இப்பொழுது போலீஸார் பிடியிலிருந்து விடுபட்டு இருவரும் சுதந்திரமாக வெளியில் சுற்றித்திறிவதால், பிரபல நடிகைகள் புடைசூழ நித்யானந்தா அமெரிக்காவில் ஏற்கனவே பேசப்பட்ட 100 ஏக்கர் தீவில் ஆஸ்ரமம் அமைத்து செட்டிலாகி விட்டதாக வெகுவிரைவில் செய்திகள் வரலாம்.

அமெரிக்காவில் 100 ஏக்கரில் ஒருத் தீவையே விலைக்கு வாங்கும் அளவுக்கு நித்யானந்தாவிடம் பைசா இருப்பதால் நீதிபதிகளின் வாயை அடைப்பது நித்யானந்தாவுக்கு பெரிய மேட்டரே அல்ல. லஞ்சத்தை வீசி எறிந்து அதிகாரிகளின் வாயை அடைப்பது நித்யானந்தாவுக்கு ஏற்கனவே கை வந்த கலை.

ஏற்கனவே பிரபல பத்திரிகை ஆசிரியர் ஒருவருக்கு 10 கோடி ரூபாயை லஞ்சம் கொடுத்து தனது ஆபாச சிடியை வெளியிடாமல் பார்த்துக் கொண்டதாக கர்நாடக சிஐடி போலீஸாரிடம் அவரே வாக்கு மூலம் கொடுத்திருந்தார். இது நாள் வரை தலைமறைவாக இருந்த ரஞ்சிதா இப்பொழுது வெளியில் வந்திருப்பதும், வந்ததும் மேற்படி சிடியில் இருப்பது நாங்கள் அல்ல என்றும், லெனின் கருப்பன் தான் என்னை கற்பழிக்க முயன்றார் என்றும் கூறி இருப்பதன் மூலமாக வழக்கை உடைப்பதற்காக நீதிபதிகளின் வாயடைக்கும் பணிகள் முடக்கி விடப்பட்டிருப்பது தெரிகிறது.  

ஏற்கனவே பாபர் மஸ்ஜித் வழக்கின் தீர்ப்பால் ஹிந்துத்துவாக்களின் பேராதரவைப் பெற்ற நீதிபதிகள் இதுவும் ஹிந்துத்துவாவுடன் சம்மந்தப்பட்ட சமாச்சாரம் என்பதால் இதற்கும் அதே பாணியை கடைப்பித்து ஹிந்துத்துவாக்களின் நன்மதிப்பை; பெறுவதற்கே நீதிபதிகள் முயற்சிக்கலாம்.


தடயவியல் சோதனைக்குட்படுத்தப்பட்டு, அறிவியல் ரீதியாக அது அவர்கள் தான் என்று நிரூபிக்கப்பட்டாலும் அந்த நிரூபனம் ஹிந்துக்களின் மனம் புண்படுவதாகவும், மதநம்பிக்கைக்கு குந்தகம் விளைவிப்பதாகவும் அமைந்திருப்பதால் ரஞ்சிதாவை லெனின் கருப்பன் கற்பழிக்க முயற்சித்தார் எனும் ரஞ்சிதாவின் கூற்றே சரியானதாகும் என்ற வரலாற்று சிறப்பு(?)மிக்கத் தீர்ப்பை எழுதி வாசிப்பதற்கு முன் நெஞ்சுறத்துடன் நீதியை கூற இருக்கும் உத்தம நீதிபதிகளின் உயிருக்கு லெனின் கருப்பனின் ஆதரவாளர்களால் ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக விஷேச(மதவெறி)பயிற்சி அளிக்கப்பட்ட ஏராளமான ஆயுதம் தாங்கிய போலீஸார், மற்றும் ராணுவ வீரர்கள் அவர்களின் வீட்டு வாசலில் குவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் செல்லுமிடங்களிலெல்லாம் லெனின் கருப்பனின் வரிப்பணத்தில் பூனைப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அனைத்து பார்ப்பன நாளிதழ்களிலும் தலைப்பு செய்தியாக வெளி வரலாம்.

இறுதியாக தமிழறிஞரும், தமிழுக்காக தண்டவாளத்தை தகர்த்தவருமான டாக்டர் கலைஞர் அவர்கள் திரைப்படத் துறையினரை அழைத்து வைத்து கலைவானர் அரங்கில் கற்புக்கான அர்த்தத்தையும் அதன் தத்துவத்தையும் திரைப்படத்துறையின் பாதுகாவலர் என்ற ரீதியில் விளக்கிக் கூற விழா நடத்தினால் நல்லது என்ற கோரிக்கையை வைக்கிறோம்.


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்