புதன், டிசம்பர் 21, 2011

.


ஏகஇறைவனின் திருப்பெயரால்...
 
إِنَّمَا تَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ أَوْثَانًا وَتَخْلُقُونَ إِفْكًا إِنَّ الَّذِينَ تَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ لَا يَمْلِكُونَ لَكُمْ رِزْقًا فَابْتَغُوا عِندَ اللَّهِ الرِّزْقَوَاعْبُدُوهُ وَاشْكُرُوا لَهُ إِلَيْهِ تُرْجَعُونَ {17}


29:17. அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனையாகப் படைத்த சிலைகளையே வணங்குகிறீர்கள். அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை வணங்குகிறீர்களோ அவர்கள் உங்களுக்குச் செல்வம் வழங்க இயலாது. எனவே அல்லாஹ்விடமே செல்வத்தைத் தேடுங்கள்! அவனையே வணங்குங்கள்! அவனுக்கு நன்றி செலுத்துங்கள்! அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

ஈமான் என்ற உயிருக்குப் பின் நபித்துவ அழைப்பு என்ற உடலுக்கு இருப் பக்கங்கள் உள்ளன. ஓன்று வணக்க வழிப்பாடுகள். மற்றொன்று அழகிய குணங்கள். அதாவது ஒன்று சிருஷ்டிகள் இறைவனுக்கு செலுத்த வேண்டிய  கடமைகள். மற்றொன்று சிருஷ்டிகள் தங்களுக்குள் பரஸ்பரம் செலுத்த வேண்டிய கடமைகள் இவ்விரண்டிற்கும் சேர்த்தே மொத்தப் பெயர் இஸ்லாம் என்பதாகும்.

மேலும் வணக்க வழிபாடுகளையும்> அழகிய குணங்களையும் இன்னொரு கோணத்தில் அணுகலாம் வணக்க வழிபாடுகளை நாம் எவனுக்கு செலுத்த வேண்டுமோ அந்த அல்லாஹ் அளவற்ற அருளாலன் அருளாலர்களுக்கெல்லாம் மிகப்பெரிய அருளாலன் என்று நாம் நம்பி உள்ளோம். அவனது அருள்வாசல் நல்லவர்கள் தீயவர்கள் என்ற பாகுபாடின்றி எவருக்கும் அடைக்கப்படுவதில்லை. இணை கற்பித்தல்> இறை மறுப்பு இந்த இரு காரணங்களைத் தவிற தன் நாட்டத்திறகேற்ப அனைத்துப் பாவங்களையும் அவன் மன்னித்து விடக்கூடியவன்.

என்று ஏகத்துவ சங்க நாதத்தை முழங்கும் காலகட்டத்தில் ஹாமித் பக்ரி மன்ப(?)ஈ. அவர்கள் தன் கைப்பட அண்ணல் நபியும் அழகிய பண்புகளும் எனும் நூலில் எழுதியதை அவருக்கே திருப்பி சமர்ப்பிக்கின்றோம்.


ஒரு வேலை இவர் மனநிலை பாதிக்கப்ட்டிருக்கலாம் இல்லை என்றால் அப்படி எழுதியவர் இப்படி மாற முடியமா ?  அவருடைய ஹிதாயத்திற்காக இறைவனிடம் பிரார்த்திப்போமாக.

47:33. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! உங்கள் செயல்களைப் பாழாக்கி விடாதீர்கள்!

47:34. (ஏக இறைவனை) மறுத்து அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்துப் பின்னர் மறுப்போராகவே மரணித்து விட்டவர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான்.

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அழைப்புப் பணியில் அன்புடன் அதிரை ஏ.எம். ஃபாரூக்