ஏக இறைவனின் திருப்பெயரால்...
وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ
يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ {60}
"என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்;49 எனது வணக்கத்தை
விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்'' என்று உங்கள்
இறைவன் கூறுகிறான். திருக்குர்ஆன்.40:60
அஜ்மீர் தர்ஹாவில் வருகின்ற 15ம் தேதி சந்தனக் கூடு திருவிழா.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
மேல்படி திருவிழாவிற்கு பாகிஸ்தானிலிருந்து அரசு அதிகாரிகள்
வருடந்தோறும் வந்து மஹானி(?)ன் அருளைப் பெற்று, மஹானுக்கு விலை உயர்ந்த புதிய போர்வையும், தர்ஹாவை
பராமரிப்பதற்கும், தர்ஹா ட்ரஸ்டிகளுக்கும் லட்சக் கணக்கான பணமும், அன்பளிப்புகளும்
கொடுப்பதுண்டு.
இதுவல்லாமல் மேல்படி திருவிழாவில் கலந்து கொண்டு மஹானி(?)ன்
ஆசியைப்பெற்று உண்டியலை நிரப்புவதற்கு அதிகாரிகள் அல்லாத ஆயிரக்கணக்கான
பாகிஸ்தானியர்களும் வருவதுண்டு.
அஜ்மீர் தர்ஹா அவுலியாவுக்கு இந்திய பக்தர்களை விட
பாகிஸ்தான் பக்தர்கள் அதிகம் எனலாம்.
அதனால் கந்தூரி எப்பொழுது வரும் ? சந்தனக் கூடு
எப்பொழுது வரும் ? பாகிஸ்தானியர்கள் வந்து கவனிக்க மாட்டார்களா ? என்று
காலண்டரில் உள்ள ஒவ்வொரு தாளை(நாளை)யும் தர்ஹா ட்ரஸ்டிகள் ஆர்வமாய் கிழிப்பதுண்டு.
அதனடிப்படையில் இன்னும் ஓரிரு நாட்களே சந்னக்கூடு
திருவிழாவிற்கு பாக்கி இருக்கையில் எல்லை தாண்டி வந்து இரண்டு இந்தியர்களின் தலையை
துண்டித்ததாலும், சரப்ஜித் சிங்கை சிறையில் அடித்துக் கொன்றதாலும் இந்த ஆண்டு
அஜ்மீர் தர்ஹா சந்தனக் கூடு திருவிழாவிற்கு பாகிஸ்தான் அதிகாரிகளை அனுமதிக்க
மாட்டோம் என்றும், அவர்களுக்கு மஹானி(?)டத்தில் விசேஷ பூஜை செய்ய மாட்டோம்
என்றும் அஜ்மீர் தர்ஹா ட்ரஸ்டிகள் அதிரடியாய் அறிவித்து ஆச்சரியத்தில் மூழ்கடித்து
விட்டனர்.
அதிர்ச்சியில் மூழ்கிப் போன நாம் தகவலைத் துலாவி எடுக்க
முற்பட்ட வகையில் இது ட்ரஸ்டிகள் தாமாக அறிவித்தது அல்ல மாறாக சங்பரிவாரங்களினால்
அறிவிக்க வைத்தது என்பதை விளங்கிக் கொண்டோம்.
பா.ஜ.க. எம்.எல்.ஏ. வாசுதேவ் தேவனானி பாகிஸ்தான் அதிகாரிகளை
அனுமதிக்கக் கூடாது என்று அவர்களை எச்சரித்ததுடன், அறிக்கையும் விட வைத்துள்ளார்.
அஜ்மீர் தர்ஹாவில் அருள் இல்லை என்பது
தனி விஷயம் ஆனாலும் சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலத்தின் உரிமைகளைப் பறிப்பது, அன்டர்
கிரவுண்டில் மிரட்டல் விடுவது, நாங்கள் நினைத்தால் தான் நீங்கள் வாழ முடியும் என்று
வெளிப்படையாக சவடால் விடுவதுப் போன்ற சங்பரிவார இந்திய தேச துரோகிகளின் வரம்பு
மீறிய செயல்களை, சொற்பிரயோகங்களை அரசாங்கம் கண்டு கொள்ள மறுப்பது ஜன நாயக நாட்டுக்கு
ஆரோக்கியமானதல்ல.
வெட்கி தலை குணிய வேண்டிய காரியம்.
இத்தனை ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திலிருந்து அதுவும்
இஸ்லாமிய நாடான பாகிஸ்தானிலிருந்து அரசு அதிகாரிகள் (முஸ்லீம்கள்) இந்தியாவுக்கு
தர்ஹா தரிசனத்திற்கு வருவதை நினைத்து வெட்கி தலைக் குணிய வேண்டி உள்ளது.
அஜ்மீரில் கடந்த 2012ல் நடந்த ஒரு சம்பவத்தை இங்கே
குறிப்பிடுவது அஜ்மீர் தர்ஹா அபிமானிகளுக்கு பலனளிப்பதாக அமையும் என்று
நினைக்கிறோம்.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் குடும்பம் ஒன்றரை
வருடமாக வறுமையில் வாடியக் காரணத்தினால் ஜோதிடரை அணுகி வறுமை நீங்குவதற்கான
வழியைக் கேட்டுள்ளனர்.
அதற்கு 40 நாட்கள் குடும்பத்துடன் அஜ்மீர் தர்ஹாவில் தொடர்
உண்ணாவிரதம் இருந்தால் வறுமை நீங்கிவிடும் என்று எதிர்காலத்தை கணித்து(?) ஜோதிடர் கூற அதை
அப்படியே நம்பிய அந்த அப்பாவி குடும்பத்தினர் அஜ்மீர் தர்ஹா வாசலில் தொடர்
உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர்.
அக்டோபர் 12, 1012 அன்று 39 வது நாளை நெருங்கியதும் மேல்படி
குடும்பத்தினர் 12 பேரில் 16,22,23 வயதையுடைய வளர்ந்து வேர் விடக்கூடிய 3 வாலிபக்
குருத்துக்கள் அநியாயமாக கருகி மூர்ச்சையாகினர். மீதி 9 பேரும்
கவலைக்கிடமாகி உயிருக்குப் போராடும் நிலையில் தர்ஹா ட்ரஸ்டிகளாகிய கல்நெஞ்சர்களால்
ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளனர். ( அந்த 9 பேரும் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை ).
பக்கத்து மாநிலத்திலிருந்து வந்து வறுமை நீங்கக் கோரி வாசல்
கதவருகே துடியாய் துடித்து செத்து மாண்டவர்களை காப்பாற்ற முடியாத மஹான்(?) கடல் கடந்து
வந்த பாகிஸ்தானிகளின் கோரிக்கையையா நிறைவேற்றப் போகிறார் ?. ஒருக்காலும்
நிறைவேற்ற முடியாது !.
ஒரு 'ஈ'யைக் கூட
படைக்க சக்தியற்றவர்கள்.
ஒரு 'ஈ'யைக் கூட படைக்க அருகதை அற்றவர்களால் உயிரை தடுத்து நிருத்த
முடியுமா ?
22:73. மனிதர்களே! உங்களுக்கு ஓர்
உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள்
யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க
முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து
அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.
குறிப்பிட்ட நேரத்தில் பிரிந்து செல்லும் உயிரையும், நிகழ இருக்கும்
சம்பவத்தையும் உலகில் எவராலும் தடுத்து நிருத்தவே முடியாது.
ஏன் தங்களை தாங்களே காத்துக் கொள்ள முடியாத பலஹீனர்கள் தான்
கேட்போரும், கேட்கப்படுவோரும் என்பதை எவ்வளவு அழகான உவமையில்
அல்லாஹ் குறிப்பிடுகிறான் என்பதை கவனியுங்ள்.
உயிருள்ள எவரின் கோரிக்கையையும், உயிரற்ற எவரும்
கேட்க முடியாது.
உலக அதிபதி அல்லாஹ் ஒருவனால் மட்டுமே அழைப்போர்களின்
அழைப்புக்கு பதிலளிக்க முடியும், (கோரிக்கையை எற்றுக் கொள்ள முடியும்) உதவி புரிய முடியும்.
''என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும்
பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்'' என்று உங்கள் இறைவன்
கூறுகிறான். 40: 60.
திருமறையைப் புரட்டுங்கள் அல்லாஹ் அல்லாதோருக்கு சிரம்
பணிவது, வேண்டி நிற்பது பொண்ணான நேரத்தை வீணடிக்கும் செயல் என்பதையும் அது மன்னிக்க
முடியாத பெரும்பாவம் என்பதையும் உணருவீர்கள்.
தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ்
மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய
பாவத்தையே கற்பனை செய்தார். 4:48.
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى
الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ
وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம்
உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன்-3:104.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்