ரூபாய் நோட்டில் உள்ள சின்னம் கழுத்தறுக்கும் கத்தி ?
கூறுகிறார் வாஸ்து சாஸ்திர வியாபாரி ராஜ்குமார் ஜான்ஹரி ?
வரலாறு காணாத அளவுக்கு உலக அரங்கில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து இன்று இந்தியாவின் பொருளாதாரத்தையே அதள பாதாளத்திற்கு கொண்டு செல்லும் அளவுக்கு ஆக்கி விட்டது.
ரூபாயின் மதிப்பு வீழ்வதை தடுத்து நிருத்த ரிசர்வ் வங்கி கவர்னருடன் பிரதமரும், நிதியமைச்சரும் தொடர்ந்து ஆலோசனை நடத்தி திட்டங்கள் வகுத்து அதில் சிலவற்றை செயல்படுத்தி வருவதை அறிந்து வருகிறோம்.
உலக அரங்கில் ரூபாயின் வீழ்ச்சிக்கு மத்திய அரசின் தவறான பொருளாதாதாரக் கொள்கையேக் காரணமென்று எதிர்கட்சிகளும், ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தான் காரணமென்று ஆளும் கட்சியும் மாறி மாறிக் கூறி வருகின்றன.
இதில் எது சரியோ ? ஆனால் 2010ல் இந்திய ரூபாய்க்கு வரையப்பட்ட புதிய சின்னம் தான் ரூபாயின் வீழ்ச்சிக்கு காரணமென்று அறிய கண்டு பிடிப்பு ஒன்றை கண்டு பிடித்துக் கூறி உள்ளார் வாஸ்து சாஸ்திர வியாபாரி ராஜ்குமார் ஜான்ஹரி என்பவர்.
புதிய சின்னத்தில் 'ஆர்' என்ற ரோமானிய எண் மற்றும் இந்தியில் பயன்படுத்தப்படும் 'ரா' என்ற எழுத்துக்கான தேவநகரி மொழி கலந்த வடிவத்துடன் அதன் நடுவே இருக்கும் கோடு வாஸ்து சாஸ்திரப்படி கழுத்தை அறுக்கும் கத்தி போல் அமைந்திருப்பது தான் உலக நாடுகளில் இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமென்று அறிவுக்குப் பொருந்தாத விளக்கமொன்றைக் கூறி உள்ளார்.
மேல்படி சின்னத்தை உருவாக்கிய சென்னையைச் சேர்ந்த உதயகுமார் கூறுகையில் தேசிய கொடியின் மூன்று வண்ணங்களை மனதில் வைத்தே தேச பக்தியை வெளிக்காட்டும் விதத்தில் இதை உருவாக்கினேன் அப்பொழுது அனைவரையும் அதுக் கவர்ந்திருந்தது இப்பொழுது இப்படிக் கூறினால் நான் என்ன செய்வது என்று வருந்துகிறார். ( வருந்தத் தேவை இல்லை இந்த ஜோதிடர்களின் பிழைப்பே இது தான் )
2010ல் புதிய சின்னம் அச்சிடப்பட்ட ரூபாய் வெளியிடப்பட்டப் பிறகே மேற்காணும் படு மோசமான வீழ்ச்சி ஏற்பட்டதாகவும் அப்பொழுதே வாஸ்து சாஸ்திரத்தில் கணித்து இந்த சின்னத்தால் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் என்று மத்திய அரசுக்கு பல முறை கடிதம் எழுதியதாகவும் ராஜ்குமார் ஜான்ஹரி புளம்பி உள்ளார்.
இவர் கூறுகின்றப் பிரகாரம் புதிய சின்னம் அச்சடிக்கப்பட்டக் கரன்சி வெளியான 2010 லிருந்து தான் ரூபாயின் மதிப்பு சரிந்ததாகக் கூறுவது அவருடைய அறியாமையை அல்லது வாஸ்து சாஸ்திரத்திற்கான விளம்பரத்தை இது நோக்கமாக கொண்டுள்ளது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
2010க்கும் ரூபாயின் சரிவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
புதிய சின்னம் அச்சடித்து வெளியிடப்பட்ட 2010க்கும் ரூபாயின் சரிவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை அதற்கு பல வருடங்களுக்கு முன்பே சரியத் தொடங்கி விட்டது என்பதை இவரும் இவரைப் போன்ற வாஸ்து சாஸ்திர வியாபாரிகளும், வாஸ்து சாஸ்திர நம்பிக்கையாளர்களும் புரிந்து கொள்ளட்டும்.
எந்த வாஸ்து சாஸ்திரத்தை தூக்கி நிருத்தவதாற்காக இந்த சந்தர்ப்பத்தை விளம்பரத்துக்காக பயன்படுத்தினாரோ அதுவே இதற்கு எதிராக அமைந்து விட்டது.
தேவையற்ற பில்டப்பினால் வந்த வினை.
அமெரிக்க டாலர், ஐரோப்பிய யூரோ, பிரிட்டிஷ் பவுண்டு, ஜப்பான் என் என வளர்ந்த நாடுகளின் கரன்சிக்கு சின்னங்கள் உள்ளது போல, இந்திய கரன்சியான ரூபாய்க்கும் சின்னம் வேண்டும் என்று 2009ம் ஆண்டு பட்ஜெட்டின் போது நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவித்திருந்தார்.
அதனடிப்படையில் தான் இந்தியா முழுவதும் போட்டி வைத்து அனைவராலும் ஈர்க்கப்படுகின்ற அளவுக்கு சிறப்பான சின்னம் வரைபவருக்கு பரிசும் அறிவித்து மேல்படி சின்னம் தேர்வு செய்யப்பட்டு அதற்காக இரண்டரை லட்சம் ரூபாய் பரிசும் வழங்கப்பட்டது.
புதிய சின்னம் தேர்வு செய்யப்பட்டதும் 'இந்த சின்னம் நமது கலாசாரத்தையும், தனித்தன்மையையும் பிரதி பலிக்கிறது. இது மக்களை கவரும்' என்று மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி மட்டும் அடக்கமாக அறிவித்திருந்தார்.
ஆனால் இந்த சின்னத்தால் இந்திய ரூபாயின் வலிமை அதிகரிக்கும். சர்வதேச அளவில் பிரபலமாகும். அண்டை நாடுகளில் இந்திய ரூபாய் தனித்துவம் பெறும் என ஒரு சில ஆளும் கட்சியினராலும் சில பொருளாதார நிபுணர்களாலும் ஆகா, ஓகோ என்று அளவுக்கு மீறி அவசியமில்லாமல் புகழ்ந்து தள்ளப்பட்டது.
இந்த சின்னத்தால் தான் இந்திய ரூபாய் உலக அளவில் உயர்ந்து நிற்கப் போகிறது என்ற தேவை இல்லாத பில்டப்பும் அதன் பின்னர் ஏற்பட்ட சரிவும் தான் ராஜ்குமார் ஜான்ஹரியைப் போன்ற வாஸ்து வியாபாரியால் மூளையை மழுங்கடிக்கச் செய்யும் வாஸ்து சாஸ்திரத்தை தூக்கி நிலை நிருத்த முயற்சி செய்தனர்.
வணிகமாகி விட்ட வாஸ்து சாஸ்திரம்.
எதிர் காலத்தை கணித்துக் கேட்பதற்காக ஜோதிடனிடமோ அல்லது வீடோ, கடையோ கட்டுவதற்காக வாஸ்து சாஸ்திரக் காரனிடமோ தட்சனை என்ற கைக் கூலி இல்லாமல் யாராலும் போக முடியாது.
வயிற்றுக்காக உடல் உழைப்பு இல்லாத எத்திப் பிழைக்கும் பிழைப்பு தான் மனிதர்களில் சிலர் உருவாக்கிக் கொண்ட ஜோதிடம், வாஸ்து சாஸ்திரம், போன்றவைகள். (இவர்களை காப்பி அடித்து உருவாக்கியது தான் பால் கித்தாபு ).
வயிற்றுக்காக உடல் உழைப்பு இல்லாத எத்திப் பிழைக்கும் பிழைப்பு தான் மனிதர்களில் சிலர் உருவாக்கிக் கொண்ட ஜோதிடம், வாஸ்து சாஸ்திரம், போன்றவைகள். (இவர்களை காப்பி அடித்து உருவாக்கியது தான் பால் கித்தாபு ).
இவர்களின் வேதங்கள் இவற்றை வெளிப்படையாகவே வலியுருத்துகிறது, இந்த தீமைகளை வலியுருத்தும் வேதம் கடவுளின் வார்த்தைகளாக இருக்கவே முடியாது. இதிலிருந்தே மேல்படி வேதங்களை இவர்களின் முன்னோர்கள் (மனிதர்கள்) எழுதியவைகள் என்பதை விளங்கிக் கொள்ளலாம். ஆதாரம்: வேதத்தில் வாஸ்து ...
வேதங்களில் தனித்து விளங்கும் திருமறை
உலகில் உள்ள எந்த மனிதராலும் நாளை என்ன நடக்கும் என்பதை கணித்துக் கூறவே முடியாது அது இறைவன் ஒருவனுக்கு மட்டுமே தெரியும் என்று உலக பொதுமறை திருக்குர்ஆன் இயம்புகிறது.
6:59. மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அவன் அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அதை அவன் அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில்429 உள்ள விதையானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில்157 இல்லாமல் இல்லை. திருக்குர்ஆன்: 6:59
மேலும் அறிய...
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ
وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ
الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத்
தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி
பெற்றோர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்